Published : 27,Oct 2021 01:29 PM
கடப்பாக்கம்: அரசுப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீ ர் ஆய்வு மேற்கொண்டார்
இல்லம் தேடி கல்வி என்ற நிகழ்ச்சியை தொடங்கிவைக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கடப்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவையும் ஆய்வு செய்தார். மேலும் பள்ளி ஆசிரியர்களிடமும் உரையாடினார்.
இந்த ஆய்வின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
இதனைப்படிக்க....ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் அதிருப்தி