[X] Close

டி20 உலகக் கோப்பை: 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய கர்டிஸ் கேம்பர்

விளையாட்டு

T20-Cricket-World-Cup-Ireland-bowler-Curtis-Campher-takes-four-wickets-in-four-balls-against-Netherlands

டி20 கிரிக்கெட் போட்டிகளில் பரபரப்புக்கு துளி அளவும் பஞ்சம் இருக்காது. அதுவும் டி20 உலகக் கோப்பை என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் 2021, டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளான குரூப் சுற்று போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் அயர்லாந்து நாட்டு கிரிக்கெட் வீரர் கர்டிஸ் கேம்பர். 

image

22 வயது வீரரான அவர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். அயர்லாந்து அணிக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரரும் இவர் என்ற சாதனையை இதன் மூலம் படைத்துள்ளார். 


Advertisement

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவர் அயர்லாந்து நாட்டு அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். 

இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்களில் 26 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் நான்கு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி இருந்தார். அக்கர்மன், டோஷேட், எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வ் என நான்கு நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை அவர் அவுட் செய்திருந்தார். அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

வழக்கமாக அயர்லாந்து அணி என்றால் அதிரடி பேட்ஸ்மேன் ‘கெவின் ஓ பிரையன்’ பெயர்தான் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஞாபகம் வரும். தற்போது அதில் தனது பெயரையும் சேர்த்துள்ளார் கேம்பர். 


Advertisement

image

டி20 கிரிக்கெட்டில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களாக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கானும், இலங்கை அணியின் மலிங்காவும் உள்ளனர். இருவரும் 2019-இல் அந்த சாதனையை படைத்திருந்தனர். ரஷீத் - அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், மலிங்கா - நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அதை செய்திருந்தனர். டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ, ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close