சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை அணி நான்காவது முறையாக அதை வெல்ல ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத இறுதிப் போட்டியாக அமைந்த 2019 இறுதிப் போட்டி குறித்து இப்போது பார்க்கலாம்.
வழக்கமாக விளையாட்டுப் போட்டி என்றால் வீரர்கள் வியர்வை சிந்தி விளையாடுவார்கள். ஆனால் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் வீரர் வாட்சன் “ரத்தம் சொட்ட சொட்ட…” விளையாடி இருந்தார். அதனால்தான் அந்த பைனல் நீங்க முடியாத நினைவலைகளாக தொடர்கின்றன.
அந்த சீசனில் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை விளையாடியது. அந்த போட்டியில் மும்பை முதலில் விளையாடி 149 ரன்களை எடுத்திருந்தது. 150 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை விரட்டியது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் டைவ் அடித்த போது காயம் ஏற்பட்டத்தில் இடது கால் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்திலிருந்து உதிரம் வெளிவந்துக் கொண்டிருக்க போர் குணத்துடன் களத்தில் விளையாடினார் வாட்சன். ஆட்டம் முடிய இரண்டு பந்துகள் மட்டுமே எஞ்சியிருக்க ரன்-அவுட்டாகி வெளியேறினார் அவர். அதனால் மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை அந்த முறை வென்றிருந்தது.
ஆட்டத்திற்கு பிறகு ஆறு தையல் அவரது காயத்திற்கு போடப்பட்டதாக முன்னாள் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் சொல்லி இருந்தார். முழங்காலில் ரத்தம் வழிய இருக்கும் வாட்சனின் புகைப்படம் அதன்பிறகு பல நாட்களுக்கு வைரலாக பகிரப்பட்டு வந்தது.
2018 முதல் 2020 வரை மூன்று சீசன் சென்னை அணிக்காக விளையாடிய வாட்சன் 1252 ரன்களை எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் சென்னை அணிக்கு வாழ்த்து சொல்லி உள்ளார் அவர்.
“இது சென்னை அணிக்கு சிறப்பான சீசனாக அமைந்துள்ளது. கணக்கை நான்காக உயர்த்துங்கள்!” என ட்விட்டரில் வாட்சன் சொல்லியுள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!