[X] Close

”‘விநோதய சித்தம்’ திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” - சமுத்திரகனி

சினிமா

Director-Samuthrakani-shares-about-his-film-Vinothaya-Sitham

“விநோதய சித்தம் திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” என அப்படத்தின் இயக்குனர் சமுத்திரகனி கூறியுள்ளார்.

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரகனி இயக்கியிருக்கும் திரைப்படம் விநோதய சித்தம். இதில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்தப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய படக்குழுவினர், சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை முன்வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி: இன்று துவங்கிய அருண் விஜய்யின் ‘யானை’ மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு


Advertisement

image

பின் பேசிய படத்தின் இயக்குநர் சமுத்திரகனி, “20 வருடத்திற்கு முன்பு நான் பார்த்த ஒரு மேடை நாடகத்தை தற்போது திரைப்படமாக உருவாகி உள்ளேன். இந்த திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார். இத்திரைப்படம் ஜீ-5 ஓ.டி.டி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close