[X] Close

வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வடகிழக்கு பருவமழை தாமதமாகுமா?

தமிழ்நாடு

Will-the-northeast-monsoon-be-delayed-due-to-the-formation-of-a-depression-in-the-Bay-of-Bengal-Will-the-monsoon-decrease-due-to-the-delay
வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வடகிழக்கு பருவமழை தாமதமாகுமா? தாமதத்தால் பருவமழை குறையுமா? என்பதை விரிவாக பார்க்கலாம்.
 
தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல பகுதிகளில் விலக தொடங்கிவிட்டது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் முழுமையாகவும் மற்றும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களிலும் விலகிவிட்டது. அடுத்த 2 நாட்களில் இன்னும் பல மாநிலங்களில் விலக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்னுமும் மேற்கில் இருந்து காற்று வீசிக் கொண்டிருப்பதால் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
இந்நிலையில் வங்கக்கடலில் 10ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால், பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.
 
image
மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை நீடிக்கும் நிலையில் தற்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒடிஷாவை நோக்கி செல்லும் என்றும், 20ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது இன்னும் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி தான் தென்மேற்கு பருவமழை விலகி பின் தாமதமாக பருவமழை தொடங்கியது.
தாமதம் ஒருபோதும் மழையின் அளவை குறைக்காது என சுட்டிக்காட்டும் வானிலை ஆய்வாளர்கள், 2015ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையும் குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே தென்மேற்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில் வடகிழக்கு பருவமழையை சேமிக்க இப்போதே தயாராகுதல் அவசியம்.
 

Advertisement

Advertisement
[X] Close