பல பிரச்னைகளால் தரமணி படம் ஓராண்டுகளுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
புதுமுக நடிகர் வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் வெற்றிவிழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் ராம், “தரமணி படம் வெளியாவதில் நிறைய பிரச்னைகள் இருந்தன. புதுமுக நடிகரை வைத்து ஒன்றரைக் கோடிக்குள் தான் ஒரு படத்தை எடுக்க வேண்டும். ஆனால் ஐந்தரை கோடி ரூபாய் செலவாகிவிட்டது. படத்தை அவ்வளவு தொகைக்கு யாரும் வாங்க வரவில்லை. இந்தப்படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஒருநாள் இப்படத்தின் தயாரிப்பாளர் தரமணி படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. எப்படி விவேகம் படம் ரிலீஸ் அன்று இந்தப் படத்தை வெளியிட முடியும், எந்த ஒரு திரையரங்கும் கிடைக்காதே என்று பயந்தேன். பின்னர் ஆண்ட்ரியா வந்து இரண்டும் வெவ்வேறு கதைகள். அதனால் பயப்பட வேண்டாம். படம் ரிலீஸானாலே வெற்றிதான் என்று கூறினார். அதன்பிறகு சமாதானம் ஆனேன்” என்று கூறினார்.
அஜித் நடித்த விவேகம் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு பின் ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. இதன் காரணமாக சில படங்கள் அந்தத் தேதியில் வெளியாகின.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!