திரையரங்குகளில் படங்கள் வெளியாவது நடிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என அதர்வா தெரிவித்துள்ளார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ், ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தள்ளிப்போகாதே. தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த நின்னுக்கோரி என்ற திரைப்படத்தை தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்தப் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற படக்குழுவினர் தள்ளிப்போகாதே திரைப்படம் காதல், குடும்பம் ஆகியவற்றின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
அதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களைப் போல ஆபாசம் இல்லாமல் எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் ஆர்.கண்ணன் தெரிவித்தார். அதேபோல் இந்த திரைப்படம் ஒரு ஆண்டுகள் முன்பே வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இதனால் திரையரங்கில் வெளியாகுமா அல்லது ஓ.டி.டியில் வெளியாகுமா என்ற குழப்பத்திலேயே அனைவரும் இருந்ததாக அதர்வா தெரிவித்தார். மேலும் திரையரங்கில் ஒரு படம் வெளியாவது அந்த நடிகருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், அந்த வகையில் தற்போது தானும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறினார். மேலும் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!