’பீஸ்ட்’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நிறைவடைந்தது. இந்த நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘டாக்டர்’ வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அதோடு, தெலுங்கிலும் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் வெளியாகிறது.
இதனால், இன்று ஹைதராபாத்தில் சிவகார்த்திகேயன், நெல்சன் உள்ளிட்டோர் படத்தின் புரொமொஷனுக்காக சென்றிருந்தனர். அங்கு தொகுப்பாளினி ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்டதற்கு “டாக்டர் படம் வெளியானபிறகே ‘பீஸ்ட்’ அப்டேட் வரும்” என்று அப்டேட் கொடுத்திருக்கிறார் நெல்சன். ’பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானபிறகு இதுவரை எந்த அப்டேட்டையும் கொடுக்கவில்லை படக்குழு. அதற்குள், ’விஜய் 66’படத்தின் அப்டேட்டும் வந்துவிட்டது. ஆனால், படத்தின் முதல் பாடல், வெளியீடு குறித்த எந்த அப்டேட்டும் கொடுக்காததால் ‘பீஸ்ட் அப்டேட் கொடுங்க நெல்சன்’ என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!