[X] Close

தனுஷின் மலையாளப்பட டீசர் வெளியானது!

Dhanush-s-malayalam-teaser-released-

மலையாள திரையுலகிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகும் தனுஷ் நிறுவனத்தின் முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என பல அவதாரங்களில் திரைத்துறையில் கால்பதித்துள்ள தனுஷ் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் தனது வுண்டர்பார் படத்தியாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்துள்ள அவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி, மலையாளப் படங்களையும் அவர் தயாரித்து வருகிறார். அவர் மலையாளத்தில் தயாரித்துள்ள முதல் படமான ‘தரங்கம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.  இந்தப்படத்தை மினி ஸ்டுடியோ என்ற கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம், இணைந்து தனுஷ் தயாரித்துள்ளார். இதில் டொவினோ தாமஸ் ஹீரோவாகவும், சாந்தி பாலகிஷ்ணன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை டோமினிக் அருண் இயக்கியுள்ளார். தரங்கம் படம்  ரிலீஸாகாத நிலையில், அடுத்த படத்தையும் தயாரிக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளார் தனுஷ். கால்பந்து வீரரான ‘மரடோனா’வின் பெயரை அடுத்த படத்திற்கு தலைப்பாக அவர் வைத்துள்ளார். விஷ்ணு நாராயணன் இந்தப் படத்தை இயக்க, இதிலும் தரங்கம் படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷர்மிளா நாயர் அறிமுகமாகிறார்.
 


Advertisement

Advertisement
[X] Close