Published : 20,Sep 2021 09:20 PM

சைமா: 7 விருதுகளைக் குவித்த ‘சூரரைப் போற்று: படக்குழுவினரை வாழ்த்திய சூர்யா

Actor-suriya-Soorarai-Pottru-Won-7-Awards-at-SIIMA

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருது வழங்கும் விழாவில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ 7 விருதுகளைக் குவித்துள்ளதற்கு நடிகர் சூர்யா படக்குழுவினரின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ தீபாவளியையொட்டி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு படமாக்கினார் சுதா கொங்கரா. இந்தியா முழுக்கவே ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறையினரும் ’சூரரைப் போற்று’படத்தை பாராட்டினார்கள்.

image

சமீபத்தில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ’சூரரைப் போற்று’ சிறந்த படம், சிறந்த நடிகர் என இரண்டு விருதுகளைக் குவித்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சைமா விருது விழாவில் 7 விருதுகளைக் குவித்துள்ளது.

image

சிறந்த நடிகர். சிறந்தப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என ஏழு விருதுகளை அள்ளியுள்ளது. இதனை உற்சாகத்துடனும் பெருமையுடனும் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா பகிர்ந்து மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சைமா விருதுகள் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் கொடுக்கப்படவில்லை. இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானப் படங்களுக்கும், 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து தற்போது விருது கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்