முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டுதலுக்குரியது - மாணவர்கள்

முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டுதலுக்குரியது - மாணவர்கள்
முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டுதலுக்குரியது - மாணவர்கள்

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து பேசிய மாணவர்கள், "இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்தோம். கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி.

விடுதி உள்ளிட்ட கட்டணங்கள் குறித்து கவலையில் இருந்தோம். முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது'' என்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com