Published : 12,Sep 2021 10:14 PM

கன்னியாகுமரி: சாதி கடந்து தொழில் செய்த குடும்பத்துக்கு நடக்கும் அநீதி.. நவீன தீண்டாமையா?

Kanyakumari--Deny-to-road-for-caste-refused-working-family

கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் அருகே வறுமையின் கொடுமையால் சாதி கடந்து மயானம் தோண்டுதல்முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தினருக்கு வழிப்பாதை தர மறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் அருகே அமைந்துள்ளது குன்னங்காடு கிராமம். இந்த கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் நெசவு தொழிலை பிரதானமாக செய்து வந்த நிலையில், அந்த தொழில் நலிவடைந்ததை தொடர்ந்து வறுமை காரணமாக ஒவ்வொரு குடும்பத்தினரும் மாற்று தொழிலை செய்து வந்த நிலையில் குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டுமே நெசவு தொழிலை செய்து வந்துள்ளனர்.

image

இந்த நிலையில், வறுமை காரணமாக நெசவு தொழிலை விட்டு மயானம் தோண்டுதல், முடி திருத்தும் தொழிலுக்காக ஒரு நெசவாளர் குடும்பம் கந்த 20 வருடங்களுக்கு முன் சென்ற நிலையில், அந்த குடும்பத்தை நெசவாளர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கிய நிலையில் அந்த குடும்பத்தினருக்கு குன்னங்காடு காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

அந்த குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததால் காமராஜர் பகுதிக்கு செல்லும் மற்ற சமூகத்தினருக்கு நெசவாளர்கள் வழிப்பாதை கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தோளிலேயே சுமந்து சென்ற நிலையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனைத்து பொருட்களையும் தலைச்சுமையாக எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு வழிப்பாதை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் என அனைவருக்கும் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தாங்களே அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைக்க திட்டமிட் போது நெசவாளர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது வருவாய்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர், இருதரப்பிலும் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் சாலை அமைக்க வந்த இரண்டு வாகனத்தை கைப்பற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

கல்வி அறிவுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் முடி திருத்தும் தொழிலை காரணம் காட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு அந்த குடும்பத்திற்கு ஆதரவு கொடுத்த சமூகத்திற்கும் வழிப்பாதை தர மறுக்கும் மற்றொரு சமூகத்தால் மீண்டும் தீண்டாமை தலை தூக்குகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது.

இதனைப்படிக்க: மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி - ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார் உதயநிதி 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்