[X] Close

தமிழ்நாட்டில் 1608 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : நேற்றை விட எண்ணிக்கை குறைவு

கொரோனா வைரஸ்

Today-1608-People-tested-Positive-for-COVID19-In-Tamil-Nadu-State-of-India

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1608 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று 1639 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.  


Advertisement

கடந்த நான்கு நாட்களாக மாநிலத்தில் அதிகரித்து வந்த தொற்று எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது. 

1512 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 22 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் 16,473 பேர் தற்போது உள்ளனர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. 


Advertisement

image

கோவையில் 212 பேர், சென்னையில் 197 பேர், ஈரோட்டில் 160 பேர், தஞ்சாவூரில் 115 பேர், செங்கல்பட்டில் 113 பேர், திருப்பூரில் 83 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close