[X] Close

தேனி: தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசுத்திட்டங்கள் அறிவிப்பு

வீடியோ ஸ்டோரி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பரிசுத் திட்டங்களை ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Advertisement

மாவட்டம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரியகுளத்தில் உள்ள எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி சார்பில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. முதலில் வரும் நூறு நபர்களுக்கு டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கப்படுகிறது.

image


Advertisement

அதே போல தடுப்பூசி போட்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது. நூறு சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, பரிசுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஊராட்சிமன்றத் தலைவர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close