Published : 12,Aug 2017 11:33 AM

மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லை: தமிழிசை விமர்சனம்

Tamilisai-Soundararajan-criticized-mk-stalin

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, நம்பிக்கை இல்லா தீர்மான‌ம் கொண்டு வருவதில், முதலில் நம்பிக்கை இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் முதலில் மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லை என்பது தான் எனது கருத்து. அதனால் இது அரசியல் செய்தியாக ஆகுமே தவிர வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை" என தெரிவித்தார்.

முன்னதாக தேவைப்பட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் பழனிசாமி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஏற்கனவே பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என கூறியிருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்