Published : 12,Aug 2017 11:24 AM

அப்பாவிற்கு தப்பாத பிள்ளை மு.க.ஸ்டாலின்: செல்லூர் ராஜூ

Sellur-raju-criticized-mk-stalin

அப்பாவிற்கு தப்பாத பிள்ளையாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின்  இருக்கிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி ஸ்டாலின் கூறியது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "கருணாநிதி அரசியலில் இருக்கும்போது நாள்தோறும் கடிதம் எழுதுவார். அதனை அனைத்து பத்திரிகைகளுக்கும் கொடுப்பார். அவர் படம் பத்திரிகைகளில் வரவேண்டும். அதுதான் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவரின் பணியாக இருந்தது. அதே செயலை மு.க.ஸ்டாலின் இன்று பின்பற்றுகிறார். அப்பாவிற்கு தப்பாத பிள்ளையாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்" என விமர்சனம் செய்தார்.

தமிழக அரசு மீது தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்