[X] Close

பூனையுடன் மல்லுக்கட்டிய சிறுத்தை- கிணற்றுக்குள் நேருக்கு நேர் மோதல்; வைரல் வீடியோ

வைரல் வீடியோ

A-Leopard-and-A-Cat-met-face-to-face-in-water-well-in-Nashik-District-Maharashtra-State-of-India-and-the-video-goes-viral--

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் காட்டு விலங்கான சிறுத்தை ஒன்று, வீட்டு விலங்கான பூனையுடன் மல்லுக்கு நின்றுள்ளது. இந்த இரண்டு பிராணிகளும் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. 


Advertisement

நாசிக் பகுதியில் இருந்த ஒரு பூனையை விரட்டி பிடிக்கும் நோக்கில் சிறுத்தை பாய்ந்துள்ளது. அதன் பாய்ச்சலில் இருந்து தப்ப பூனையும் வேகமெடுத்து ஓடியுள்ளது. இறுதியில் இரண்டும் அந்த பகுதியில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளன. தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இரண்டையும் பத்திரமாக மீட்கும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அப்போது திடீரென அந்த சிறுத்தை தண்ணீருக்குள் பாய்ந்து பூனையை தாக்க முயன்றுள்ளது. 

சிறுத்தையின் இந்த தாக்குதலுக்கு பூனை லேசாக பின்வாங்கி இருந்தாலும், முழுவதுமாக பயந்து பின்வாங்காமல் இருந்தது. அதோடு சிறுத்தைக்கு எதிரே தில்லாக நின்று கெத்து காட்டியுள்ளது அந்த பூனை. இந்த காட்சிகள் தான் இணையத்தில் வைரலாகி உள்ளனர். 

வனத்துறையினரின் நீண்ட நேர முயற்சிக்கு பிறகு சிறுத்தையும், பூனையும் சிறு காயம் கூட இல்லாமல் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தித்தாளில் செய்தி வெளியாகி உள்ளது. 


Advertisement

மீட்கப்பட்ட அந்த சிறுத்தை காப்புக் காட்டில் விடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்கலாம் : ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய அணி? - ஒரு அலசல்


Advertisement

Advertisement
[X] Close