[X] Close

ஆப்கானிஸ்தான் விவகாரம்: உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா

A-high--evel-panel-headed-by-Prime-Minister-Modi-is-holding-consultations-on-the-Afghanistan-issue-
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனை நடந்து வருகிறது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் பின் வாங்கியதைத் தொடர்ந்து, நாடு மீண்டும் தலிபான்களின் ஆளுகைக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தலிபான்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
 
 
ஆப்கானிஸ்தான் நிலவரத்தின் தாக்கம், தலிபான்கள் மூலம் காஷ்மீரில் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 

Advertisement

Advertisement
[X] Close