[X] Close

கோவையில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு

3-students-tested-corona-positive-in-Coimbatore

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

கோவை சுல்தான்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மூன்று பேரும் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

image


Advertisement

மேலும் மாணவர்கள் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவரும், புதுக்கோட்டையில் 10ஆம் வகுப்பு மாணவரும் நோய் தொற்றுக்கு ஆளான நிலையில், கோவையில் 3மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close