[X] Close

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திங்களன்று அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழ்நாடு

The-State-Election-Commission-is-scheduled-to-hold-consultations-with-the-recognized-political-parties-next-Monday-regarding-the-rural-local-body-elections-in-Tamil-Nadu
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, வரும் திங்களன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தத் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இதற்கான ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மாநில தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கான நேரத்தை, காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை என அதிகரித்து அறிவித்தது.
 
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டம், வரும் திங்களன்று நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் பகல் 12 மணிக்கு கூட்டம் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close