Published : 03,Sep 2021 03:21 PM

நாமக்கல்: ஸ்பா மசாஜ் பெயரில் பாலியல் தொழில்; 6 இளைஞர்கள் கைது

6-youths-in-Namakkal-belonging-to-a-spa-massage-have-been-arrested-for-engaging-in-sex-work

நாமக்கல்லில் ஸ்பா மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்ததாக 6 இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து 6 பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு காவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

image

நாமக்கல் சேலம் சாலையில் மசாஜ்  சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பேரில், அங்கு சோதனை மேற்கொள்ளும்படி அவர் நாமக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவரின் உத்தரவை தொடர்ந்து, நேற்று இரவு நாமக்கல் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையிலான போலீசார் சேலம் சாலையில் உள்ள பிரபலமான செல்போன் விற்பனையகத்தின் 2-வது மாடியில் உள்ள 'டீரிம் ஸ்ஃபா' என்ற அந்த மசாஜ் சென்டரில் சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த 6 இளைஞர்கள் மற்றும் 6 பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தெரிய வந்திருக்கிறது.

image

இதனையடுத்துது 12 பேரையும் நாமக்கல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்த ராம்பிரகாஷ், கேரளாவை சேர்ந்த சில்பி ஜான் மற்றும் பரமத்தி, சேலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் என மொத்தம் 6 பேர், பெண்களை வைத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

image

இதனையத்து அந்த 6 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 6 பெண்களையும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மசாஜ் சென்டரின் முக்கிய பங்குதாரர் உள்ளிட்ட சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்