[X] Close

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர் கீலானி மரணம்

இந்தியா

Syed-Ali-Shah-Geelani-passes-away-at-92

காஷ்மீர் பிரிவினை கோரும் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாகிஸ்தான் ஆதரவாளருமான சையது அலி ஷா கீலானி ஸ்ரீநகரில் காலமானார்.


Advertisement

92 வயதான அவர் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என கூறும் 26 அமைப்புகளை ஒருங்கிணைத்து ஹுரியத் மாநாடு என்ற அமைப்பை 1990களில் உருவாக்கியவர்களில் கீலானியும் ஒருவர் ஆவார்.

image


Advertisement

பின்னர் இந்த அமைப்பு தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தெஹ்ரீக் இ ஹுரியத் காஷ்மீர் என்ற அமைப்பை கீலானி தொடங்கி நடத்தி வந்தார். கீலானி மறைவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்கலாமே:  'மணி ஹெயிஸ்ட்' மாந்தர்கள் 3: ஹெல்சிங்கி, ஆஸ்லோ: காயப்படுத்த தெரியாத உன்னத ஆன்மாக்கள்!


Advertisement

Advertisement
[X] Close