[X] Close

வாடகை கார் அனுபவம் தந்த 'யோசனை' முதல் ஐபிஓ வரை - ஓலா கடந்து வந்த பாதை

சிறப்புக் களம்

Ola-IPO-in-early-2022-to-raise--2-billion-says-Report

ஓலா நிறுவனத்தின் ஐபிஒ அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் நிறுவனங்களை ஒலா நியமனம் செய்திருப்பதாக தெரிகிறது. வரும் அக்டோபரில் இதுதொடர்பாக செபியிடம் விண்ணப்பிக்கும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐபிஓ வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

பவிஷ் அகர்வால் மற்றும் அங்கித் பார்தி என்னும் இரு நண்பர்கள் இணைந்து 2010-ம் ஆண்டு உருவாக்கிய நிறுவனம் இது. இதற்கு முன்பாக பவிஷ் ஒரு சிறிய சுற்றுலா நிறுவனம் நடத்திவந்தார். குறுகிய கால சுற்றுலா நிறுவனத்தை நடத்தினார். இதற்காக பெங்களூருவில் இருந்து பந்திப்பூருக்கு ஒரு வாடகை காரில் சென்றார். ஆனால், அந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. பாதி தூரம் கடந்த பிறகு டிரைவர் கூடுதல் தொகை கேட்டிருக்கிறார். இது மோசமான அனுபவமாக இருந்தது. இதனை அடிப்படையாக கொண்டே ஒலா கேப்ஸ் என்னும் நிறுவனத்தை 2010-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்குகிறார்.

இது டிராவல் ஏஜெண்ட் போன்ற பிசினஸ் என்பதால் வீட்டில் கடும் எதிர்ப்பு. இருந்தாலும் வேலையை விட்டு ஓலா தொடங்குகிறார். ஆரம்பகட்டத்தில் வென்ச்சர் கேபிடல் நிதி கிடைத்த பிறகுதான் வளர்ச்சி தொடங்குகிறது.


Advertisement

தற்போது 4ஜி சேவையில் நாம் இருக்கிறோம். ஆனால், 2010-ம் ஆண்டு 2ஜி சேவையில்தான் செயலிகள் செயல்பட வேண்டும் என்பதால் ஆரம்ப காலத்தில் பல சவால்கள் இருந்தன. அதனைத் தொடர்ந்து அடுத்த இரு ஆண்டுகளில் சர்வதேச நிறுவனமான உபெர் இந்திய சந்தையில் நுழைந்தது. மேலும், மெரு கேப்ஸ், டாக்ஸி பாஃர் ஷ்யூர் உள்ளிட்ட பல போட்டி நிறுவனங்கள் இந்தச் சந்தையில் நுழைந்தன. இத்தனையும் தாண்டில் இன்று 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஓலா செயல்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கூட ஓலா செயல்படுகிறது.

image

நிதி சார்ந்த அப்டேட்: ஓலா 1.5 பில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் வரை நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கக் கூடும். ஜூலை மாதத்தில் கூட வார்பர்க் பின்கஸ், டெமாசெக் ஆகிய நிறுவனங்கள் 50 கோடி டாலரை முதலீடு செய்திருக்கின்றன.


Advertisement

தற்போது ஓலாவில் சாப்ட்பேங்க் (22%), டென்சென்ட் (9%) டைகர் குளோபல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த ஐபிஓ-வில் கணிசமான பங்குகளை விற்கவும் சில முதலீட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கோவிட் காரணமாக நிறுவனத்தின் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருகிறது. அதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பை முதலீட்டாளர்கள் குறைத்திருக்கிறார்கள் என்னும் செய்திகள் வெளியாகியுள்ளன. லாக்டவுன் காரணமாக போக்குவரத்து சந்தை சரிந்திருக்கிறது. தற்போது மீண்டு வருகிறது. இதற்கு இன்னும் சில காலம் ஆகும் என பவிஷ் தெரிவித்திருக்கிறார்.

தற்போது சந்தையில் ஓலா எலெட்ரிக் ஸ்கூட்டர் குறித்து பரபரப்பு இருக்கிறது. சில வாரங்களுக்கு புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. ஆனால், ஓலா நிறுவனம் வேறு, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வேறு. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஒலா. தற்போது ஓலா நிறுவனத்தின் ஐபிஒதான் வெளியாக இருக்கிறது. இரண்டு நிறுவனங்களின் ஐபிஒவும் வெளியாகும் என இரு நாட்களுக்கு முன்பு பவிஷ் தெரிவித்திருக்கிறார்.

- வாசு கார்த்தி


Advertisement

Advertisement
[X] Close