[X] Close

தலைமை ஆசிரியரைக் கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்

students-in-vellore-lock-the-school-for-protest-against-head-master

வேலூர் பூட்டுதாக்கு பகுதியில் பள்ளித் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் பூட்டுதாக்கில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பூம்பாவை குறிப்பிட்ட ஒரு சமுதாய மாணவர்களை மட்டும் சாதிய ரீதியில் இழிவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். 

பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதும், ஆசிரியர்களுக்கு உணவு வாங்கிவரச் சொல்லுவதாகவும் கூறி பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரைக் கண்டித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு வந்த இரத்தினகிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியை திறந்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close