Published : 27,Aug 2021 06:33 PM

தமிழகத்தில் 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

Daily-corona-positive-cases-in-Tamilnadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,559 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,542 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,62,487 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,542ஆக உள்ளது. சென்னையில் நேற்று 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 162 ஆக குறைந்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,835 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 1 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 5 பேரும், சென்னையில் 3 பேரும், ஈரோட்டில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,797ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,793 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,56,116 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்