[X] Close

லீட்ஸ் டெஸ்ட்: 220 ரன்கள் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து அணி

விளையாட்டு

England-Cricket-Team-got-200-plus-runs-lead-in-Headingley-Stadium-against-India-in-the-Test-match

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரின் ஹெட்டிங்கிலே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.  


Advertisement


Advertisement

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோரி பெர்ன்ஸ், ஹசீப் ஹமீத், மலன் மற்றும் ரூட் என நால்வரும் அரை சதம் கடந்துள்ளனர். தற்போது ரூட் விளையாடி வருகின்றார். மலன் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்களை எடுத்திருந்தது. நாளை உணவு நேர இடைவேளை வரை இங்கிலாந்து விளையாட வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வலுவான முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற முயற்சிக்கலாம். அதை தடுக்க இந்திய அணி சிறப்பாக பேட் செய்தாக வேண்டும். 

தற்போதைய நிலையில் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க தடுமாறி வருகின்றனர். இந்த போட்டியில் இன்னும் மூன்று நாள் ஆட்டம் எஞ்சியுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close