Published : 22,Aug 2021 09:55 AM

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

Chennai-Metro-rail-will-run-from-5-30-am-to-11-pm-tomorrow

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளையிலிருந்து காலை 5.30 மணி முதல் இரவு 11 மணிவரை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை ( 23/08/21) முதல் வார நாட்களில் ( திங்கள் முதல் சனி வரை) காலை 5.30 முதல் இரவு 11 மணிவரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன. நெரிசல் மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணிவரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணிவரை 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் பத்து நிமிட இடைவெளியிலும் இரயில்கள் இயங்கும்.

மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

image

 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்