[X] Close

அரசுப் பள்ளியில் சேரவந்த மாணவனுக்கு மாலையிட்டு வரவேற்பு அளித்த தலைமையாசிரியர்!

தமிழ்நாடு

Virudhunagar-Student-enrolled-in-a-government-school-Headmaster-to-welcome

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் சேரவந்த மாணவனுக்கு தலைமையாசிரியர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.


Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக ஜெயக்குமார் என்ற ஞானராஜ் பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சென்று அடைய வேண்டும் என்ற நல் நோக்கத்தோடு பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

image


Advertisement

இந்நிலையில் இன்று அரசுப் பள்ளியில் சேரவந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீஹரி என்பவரை பள்ளி நுழைவு வாயில் அருகே வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர், மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர், பள்ளியில் சேர்ந்த மாணவரின் குடும்பத்திற்கு தனது சொந்த பணத்தில் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

image

இவர், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க புதிய ஆண்ட்ராய்டு மொபைல்களை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். தலைமையாசிரியர் ஜெயக்குமார் என்ற ஞானராஜ் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close