[X] Close

நீட் தேர்வில் தேர்ச்சி பெற வசதியாக சிடி: அமைச்சர் செங்கோட்டையன்

CD-is-convenient-to-get-NEET-exam-in-the-exam--Minister-Chengottiyan

நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி பெற வசதியாக 54 ஆயிரம் கேள்வி பதில் அடங்கிய சிடி கையேடு வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Advertisement

எழும்பூரில் நடைபெற்ற சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் தொடர் சொற்பொழிவுகள் தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், "ஒரு சில வசதி படைத்த மாணவர்கள் ஒருமாத நீட் பயிற்சிக்காக 1 லட்சம் முதல் 1.5 லட்சம் செலவு செய்து தேர்வை எழுதுகின்றனர். ஆனால் இந்த நிலைமை மாற, மாணவர்கள் எளிதாக பயிற்சி பெற 54,000 கேள்வி பதில்கள் அடங்கிய சிடி, கையேடு மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த சிடி-யில் ஆங்கிலம் மற்றும் தமிழில் கேள்வி பதில் இருப்பதோடு எளிதாக புரிந்துக்கொள்ளும்படி வரைபடமும் இருக்கிறது. இதன் மூலம் பயிற்சிக்காக தனியார் மையங்களுக்கு சென்று மாணவர்கள் செலவு செய்வது தவிர்க்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close