[X] Close

கோவை: சிறுகுறு தொழில்துறையினரை அச்சுறுத்தும் மின்வெட்டு

வீடியோ ஸ்டோரி

கொரோனா ஊரடங்கு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பல்முனை பாதிப்புகளை சந்தித்து வரும் தொழில்துறையினர், தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டால் திணறுவதாக வருந்துகிறார்கள்.


Advertisement

தொழில் நகரமான கோவையில் ஆட்டோ மொபைல், கிரைண்டர், மோட்டார் பம்ப்செட் என பல்துறை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா முதல் அலை பரவல் பாதிப்புகளில் இருந்து மீளத்துவங்கிய சமயத்தில் இரண்டாவது அலை காரணமாக தொழில் துறையினர், மீண்டும் பாதிப்புகளை சந்தித்தனர்.

இந்நிலையில், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, வெளிமாநில தொழிலாளர்கள் கோவை திரும்பாததால் பணியாளர் பற்றாக்குறை என பிரச்னைகள் நீண்டு கொண்டிருக்கும்நிலையில், தற்போது கோவையில் மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கியுள்ளது.


Advertisement

கோவை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாகவே ஒவ்வொரு நாளும் எவ்வித முன்னறிவிப்பின்றி 5 முதல் 10 ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாகவும், இதனால் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் திடீரென நிற்பதால் இயந்திர பாகங்கள் சேதமடைந்து கடுமையான பொருள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தொழில்துறையின் குற்றம்சாட்டுகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close