[X] Close

அமைச்சர்களின் விவரங்கள் நீக்கப்பட்டது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி

ministers--details-removed----The-High-Court-question

தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் தெரிந்துதான் நீக்கப்பட்டதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 21 ஆம் தேதி அமைச்சர்களின் விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசு உத்தரவின் மூலம் விவரங்கள் நீக்கப்பட்டிருந்தால், அதை ரத்து செய்து விவரங்களை மீண்டும் பதிவேற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

அப்போது, அமைச்சர்களின் விவரங்கள் தெரிந்துதான் நீக்கப்பட்டதா என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இல்லையெனில், தொழில்நுட்பக் கோளாறா? மென்பொருள் பிரச்னையா? என்றும் அவர்கள் வினவினர். இது குறித்து அரசு வழக்கறிஞர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close