[X] Close

காஞ்சிபுரம்: மதுவுக்கு அடிமையாகி தகராறு; கணவரை கொன்ற மனைவி

குற்றம்

wife-killed-husband-due-to-Torture

காஞ்சிபுரத்தில் மதுபோதையில் தகராறு செய்து வந்த கணவரின் தொல்லை தாங்காத ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.


Advertisement

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் நவ்ஷாத். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, மனைவி நஷிரியாவிடம் தினமும் தகராறு செய்துள்ளார். வியாழனன்று இரவும் மதுபோதையில் கறி வெட்டும் கத்தியைக் காட்டி நஷிரியாவை மிரட்டியுள்ளார்.

இதில் ஆவேசமுற்ற நஷிரியா கத்தியைப் பறித்து நவ்ஷாத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் நடந்தே சென்று சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close