[X] Close

தமிழ்நாட்டின் பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

வீடியோ ஸ்டோரி

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


Advertisement

சேலத்தில் முகாம் ஒன்றில் முறையாக தடுப்பூசி போடவில்லை எனக் கூறி, சுகாதார ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் அம்மாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், டோக்கன் பெற்றவர்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சுகாதார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே போன்று, கடலூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதில், பலரும் இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்திருந்தனர். மதுரையில் 12 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அன்சாரி நகர், கே.புதூர், முனிச்சாலை உள்ளிட்ட 12 மையங்களில் ஆயிரத்து 980டோஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தடுப்பூசி வந்துள்ளதால், ஒவ்வொரு மையங்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி இருப்பதால், இரண்டாவது தவணையாக தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் 3 வாரங்களுக்கு பிறகு கோவாக்சின் செலுத்தப்படுவதால், தடுப்பூசி மையங்களில் ஏராளமானோர் குவிந்தனர். மொத்தம் 10 மையங்களில் 3ஆயிரத்து 580 டோஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close