[X] Close

அஜித் நடிக்கும் அடுத்த படம்: வெளியான 'செம' அப்டேட்

சினிமா

Sathya-Jyothi-film-production-is-all-set-to-make-another-film-starring-Ajith-Kumar
அஜித் குமார் நடிப்பில் மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளது சத்யஜோதி நிறுவனம்.
 
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் அஜித் ஏற்கனவே விவேகம், விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். அதில் விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. குறிப்பாக தமிழகத்தில் இந்த திரைப்படம் 136 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
 
இந்த நிலையில், நடிகர் அஜித், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கால்ஷீட் தருவார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முன்பாக போனி கபூர் தயாரிக்கும் மற்றுமொரு படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை வினோத் இயக்குவார். இந்த படத்தை முடித்த கையோடு சத்யஜோதி நிறுவனத்தின் திரைப்படத்தில் அஜித் நடிக்க தொடங்குவார் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.
- செந்தில்

Advertisement

Advertisement
[X] Close