[X] Close

'12-18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி ஆகஸ்ட்டில் கிடைக்கலாம்' - மத்திய அரசு

இந்தியா

Vaccination-of-children-likely-to-start-from-August

நாட்டில் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதனை அவர் கூறியுள்ளார். இதனிடையே, பரிசோதனையின் இறுதி முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், சரியான ஆய்வுக்கு பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் வயதின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி சோதனைகள் நடந்து தீவிரமாக வருகின்றன.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close