Published : 26,Jul 2021 09:58 AM

சத்தியமங்கலம்: சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்

Satyamangalam-A-lone-wild-elephant-blocking-the-road-Motorists-fear

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.

image

இந்நிலையில், இன்று அதிகாலை ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை சாலையின் நடுவே நின்றிருந்தது. யானை சாலையில் நிற்பதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனத்தை நிறுத்தினர். வாகனங்களை கண்ட ஒற்றை யானை வாகனங்களை நோக்கி வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து சுமார் அரைமணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. சாலையில் யானை வாகனங்களை வழிமறித்தபடி நின்றதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்