[X] Close

காக்கையால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகள்... இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தமிழ்நாடு

Cottages-set-on-fire-by-crows-Two-lakh-worth-of-goods-damaged

காக்கையால் மூன்று குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து, இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.


Advertisement

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை வீடுகளுக்கு அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளில், காக்கைகள் கூட்டமாக அமர்ந்துள்ளன. அப்போது ஏற்பட்ட மின் உராய்வில் காக்கையொன்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளது.

image


Advertisement

இதில், எரிந்த நிலையில் காக்கை அருகில் இருந்த குடிசை வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. இதனால் குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது. மேலும் அருகில் இருந்த குடிசை வீட்டிலும் தீ பரவ தொடங்கியது. தீயில் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது.

image

இதைத்தொடர்ந்து தகவலறிந்த வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள அனைத்து பொருள்களும் எரிந்த சேதமடைந்தன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close