[X] Close

கோவை அரசு கலைக் கல்லூரியில் நிதி முறைகேடு? விசாரணைக்கு உத்தரவு

குற்றம்

UGC-research-funding-for-the-Coimbatore-Government-Arts-College-has-been-misused
கோவை அரசு கலைக்கல்லூரிக்கு யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு அளித்த ஆராய்ச்சிக்கான நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
 
கல்லூரியின் தாவரவியல் துறைக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டுவரை காலஅவகாசம் அளித்தும் அந்த நிதிக்கான பயன்பாட்டு சான்றிதழை கல்லூரி நிர்வாகம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வட்டியுடன் சேர்த்து 55 லட்சம் ரூபாய் திருப்பி அளிக்க யு.ஜி.சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
மேலும் கடந்த 3 ஆண்டுகளாக தன்னாட்சி நிதியும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் சித்ராவிடம் கேட்டப்போது, திட்டத்திற்கான நிதி கணக்கு விவரங்கள், நிதியை பெற்றது யார் என்பது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

Advertisement

Advertisement
[X] Close