Published : 17,Jul 2021 03:54 PM

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்புமிக்க சதம்... அயர்லாந்து பேட்ஸ்மேன் சிமி சாதனை

India-Born-Irish-Batsman-Simi-Singh-Scored-Century-in-ODI-and-became-the-first-player-in-ODI-Cricket-to-score-century-by-playing-as-Number-8-Batsman

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி சதம் விளாசி சாதித்துள்ளார் அயர்லாந்து ஆல்ரவுண்டர் சிமி.

இந்தியாவில் பிறந்து அயர்லாந்து நாட்டில் குடிபெயர்ந்தவர் சிமி சிங். கிரிக்கெட் வீரரான அவர் அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணிக்காக எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி சதம் விளாசி சாதித்தார் சிமி சிங். 

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய எந்தவொரு பேட்ஸ்மேனும் சதம் பதிவு செய்தது இல்லை.  மொத்தம் 91 பந்துகளில் 100 ரன்களை எடுத்திருந்தார் அவர். இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார் அவர்.

92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அயர்லாந்து. அப்போது களத்திற்கு வந்த அவர் அணியை சரிவிலிருந்து மீட்டமைக்கும் பொறுப்பை செய்தார். இருப்பினும் இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்