[X] Close

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று முக்கிய ஆலோசனை

தமிழ்நாடு

In-Tamil-Nadu-the-spread-of-Corona-is-somewhat-controlled-and-today-s-high-level-advice-on-the-opening-of-schools

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து இன்று உயர்நிலை ஆலோசனை நடைபெறுகிறது.


Advertisement

கொரோனா அச்சம் சற்று தணிந்துள்ள நிலையில், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்குமாறு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடத்துகிறார். துறையின் பல முக்கிய அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். பள்ளிகளைத் திறப்பதா வேண்டாமா, பள்ளிகளைத் திறப்பதாக இருந்தால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close