[X] Close

"கமல், மோகன்லால் உடன் பணிபுரிவது எளிது. ஏனெனில்..." - அனுபவம் பகிரும் மணிரத்னம்

சினிமா

Mani-Ratnam-said-easy-to-work-with-Kamal-Haasan-and-Mohanlal

கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எளிதானது என்று இயக்குநர் மணிரத்னம் தனது திரையுலக அனுபவமாக பகிர்ந்துள்ளார்.


Advertisement

இந்தியாவின் டாப் இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், எந்த நடிகருடன் இணைந்து பணியாற்றுவது எளிது என்பது குறித்து தனது அனுபவத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

அதன்படி, இரண்டு நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது எளிது என்று தெரிவித்திருக்கிறார். அவர்கள் வேறு யாரும் அல்ல... இந்திய திரையுலகில் தலைசிறந்த நடிகர்களாக புகழப்படும் கமல்ஹாசன், மோகன்லால் இருவரும்தான்.


Advertisement

image

"கமல்ஹாசன், மோகன்லால் இருவரும் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கிறார்கள். அவர்களுடன் பணியாற்றுவது ஓர் இயக்குநராக மிகவும் எளிதானது" என்று கூறியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். மோகன்லாலுடன் 'உணர்வு' மற்றும் 'இருவர்' என்ற இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார் மணிரத்னம். அதேபோல், `நாயகன்' படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இந்தப் படங்கள் மிகவும் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தற்போது 'பொன்னியன் செல்வன்' வரலாற்றுப் படத்தை இயக்கி வருகின்றார். தற்போது ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ஆந்தாலஜி படமான 'நவரசா', இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close