[X] Close

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு புகாரளித்த இளைஞர்: மீட்ட திருவள்ளூர் காவல்துறை

தமிழ்நாடு

It-was-recovered-after-a-young-man-complained-to-the-chief-minister-on-Twitter-that-an-expensive-bicycle-had-been-stolen
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் விலை உயர்ந்த சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததை அடுத்து அது மீட்கப்பட்டது.
 
திருவள்ளூரை சேர்ந்த அர்சத் அஜ்மல் தனது விலை உயர்ந்த சைக்கிள் திருடுபோனது குறித்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை கண்டுபிடித்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் தனது மிதி வண்டியை வாலிபர் ஒருவர் திருடும் வீடியோவையும் அஜ்மல் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அர்சத் அஜ்மலின் சைக்கிள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், திருடிய நபர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. காவல துறையினர் தமது மிதிவண்டியை கண்டுபிடித்து தந்துள்ளது குறித்து அர்சத் அஜ்மல் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
[X] Close