Published : 04,Aug 2017 05:03 PM

அப்பழுக்கற்றவர் என்றால் விஜயபாஸ்கர் தன் பதவியை ராஜினாமா செய்யட்டும்: ஸ்டாலின்

DMK-mk-stalin-ask-minister-vijaya-baskar-to-resign-his-post

சுகாதாரத்துறை அமைச்சர் அப்பழுக்கற்றவர் என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்கட்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது. பினாமிகள் பேரில் உள்ள சொத்துக்களும் முடக்கப்படிருக்கிறது. இந்நிலையில், அப்பழுக்கற்றவர் என்றால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவர் மீதான வழக்குகளை சந்திக்க வேண்டும். தான் குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டு மீண்டும் அந்தப் பொறுப்பில் வந்து உட்கார வேண்டும். அதுதான் அவருக்கு அழகு. அதைத்தான் நான் வலியுறுத்திச் சொல்கிறேன் என்று கூறினார்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர், தன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையை பயன்படுத்தி அதிமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், பிரச்னையை ஸ்டாலின் திசை திருப்புகிறார் என்றம் அரசியலில் இருந்து தன்னை அழிக்கும் நோக்கோடு அவதூறுகளை பரப்பி வரும் ஸ்டாலின் கனவு பலிக்காது என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டாலின், முதலில் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யட்டும் எனக் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்