[X] Close

’இதுதான் பெஸ்ட் ஃபினிஷ்’ : 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தோனி செய்த தரமான சம்பவம்!

விளையாட்டு

8-years-ago-MS-Dhoni-finishes-of-his-style-in-the-last-over-of-the-final-match-in-the-triangular-series-against-Sri-Lanka-and-shares-the-trophy-with-Virat-kohli

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சிறப்பு அம்சங்களின் ஒன்றுதான் பெஸ்ட் ஃபினிசர் என்பது. இந்தப் போட்டியில் எப்படியும் இந்திய அணி தோற்றுவிடும் என்ற நிலைக்கே ரசிகர்கள் சென்ற பல போட்டிகளை தனி ஆளாகவும், சில வீரர்களுடன் இணைந்து வெற்றி பெற வைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார் தோனி. அதனால்தான் தோனி களத்தில் இருக்கும் வரை எதிரணி வீரர்களுக்கு இதயத்திலும், கண்களிலும் தோல்வியின் அச்சம் இருக்கும்.


Advertisement

அப்படியொரு தரமான சம்பத்தைதான் இதேநாளில் தோனி நிகழ்த்தி காட்டினார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2013 ஜூலை மாதத்தில் இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடின. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் இதே நாளில்தான் விளையாடின. அந்த இறுதிப் போட்டியின் இறுதி ஓவரில் தனது சிறப்பான பினிஷிங் திறன் மூலம் அசத்தலாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்திருப்பார் மகேந்திர சிங் தோனி.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 48.5 ஓவர்கள் முடிவில் 201 ரன்களுக்கு அனைத்துவிட்டுகளையும் இழந்தது. 202 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. எளிய இலக்கு என்பதால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், களத்தில் நடந்ததோ வேறு. இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்ந்தது. ரோகித் சர்மா மட்டும் 58 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். 139 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆறாவது வீரராக களமிறங்கினார் தோனி. அப்போது, இந்திய அணிக்கு 63 ரன்கள் தேவையாக இருந்தது. தோனி களமிறங்கிய சில நிமிடங்களிலேயே ரோகித், ஜடேஜா, அஸ்வின் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை அணியின் பக்கம் சென்றது.


Advertisement

152 ரன்களுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. களத்தில் தோனியுடன் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். அடுத்ததாக இஷாத் சர்மா, வினய் குமார் வெளியே இருக்கிறார்கள். அதாவது தோனியை தவிர அனைத்து பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் அனைவரும் ஆட்டமிழந்துவிட்டனர். இந்த நிலையில் இந்திய அணிக்கு மேற்கொண்டு 50 ரன்கள் தேவை. தோனி மிகவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். விக்கெட்டை பறிகொடுக்க கூடாது என்பதில் குறியாய் விளையாடினார். 15 பந்துகளை வெற்றிகரமாக சந்தித்த புவனேஷ்வர் குமாரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சற்றுநேரம் தாக்குபிடித்த வினய்குமாரும் 16 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆகிவெளியேறினார். 182 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டது. இன்னும் 20 ரன்கள் இந்திய அணிக்கு தேவை கையில் ஒரே ஒரு விக்கெட்தான் இருந்தது. எப்படியே சமாளித்து கடைசி ஓவர் வரை கொண்டு வந்துவிட்டார் தோனி. இறுதி ஓவரில் கடைசி ஐந்து பந்தில் 15 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை வீசியிருப்பார் இலங்கையின் ஷமீந்தா எரங்கா. 

அந்த ஓவரின் முதல் பந்து டாட்டாக மாற ரசிகர்களின் இதயம் எகிர ஆரம்பித்தது. ஏனென்றால் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக அவ்வளவு நேரம் ரசிகர்கள் காத்திருந்தனர். கடைசி 5 பந்துகளில் 15 ரன்கள் தேவை. இரண்டாவது பந்திலேயே இமாலய சிக்ஸரை விளாசினார் தோனி. அதேபோல், மூன்றாவது பந்தில் ஆஃப் சைடில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்திலேயே சளைக்காமல் சிக்ஸர் விளாசி இந்திய அணியை வீறுநடை போட வைத்தார் தோனி. அதோடு அந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரையும் வென்றது இந்தியா. தோனி 52 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். தோனியின் சிறந்த பினிஷிங்கிற்கு இன்றளவும் இந்தப் போட்டி ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறது.

மூன்று தரமான ஸ்டம்பிங்:


Advertisement

தோனியின் தரமான இரண்டு ஸ்டம்பிங் இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்டது. அஸ்வின் ஓவரில் குஷல் பெராராவை ஸ்டைலாக வலது கையில் ஸ்டம்பிங் செய்தார். ஹெரத்தின் ஸ்டம்பிங் தான் மிகவும் வித்தியாசமானது. ஜடேஜா வீசிய அந்த ஓவரில் ஹெராத் இறங்கி அடிக்க முயற்சிப்பார். முதலில் கிரிஸில் அவரது கால் இருக்கும். அப்போது தோனி ஸ்டம்பிங் செய்வது போல் போக்கு காட்டி பின்பு ஹெராத் காலை லேசாக தூக்கிய நேரத்தில் ஸ்டம்பை பதம் பார்த்தார். நீண்ட நேர மூன்றாம் நடுவரின் பார்வைக்கு பிறகு அது அவுட் என அறிவிக்கப்பட்டது.

கோலியை கவுரவித்த தோனி:

image

அந்த தொடரில் தோனி ஓய்வு எடுத்த தருணத்தில் விராட் கோலி கேப்டன் பணியை கவனித்திருப்பார். அதனால் வெற்றி கோப்பையை கோலியுடன் இணைந்து பெற்றுக் கொண்டிருப்பார் தோனி. அவரது அந்த செயலை இன்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close