[X] Close

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகார் - 7 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

குற்றம்

பெரம்பலூரில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 7 அரசு அதிகாரிகள்மீது ஊழல் தடுப்பு காவல்துறையினர் வழக்குபதிவு செய்த நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.


Advertisement

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டரை ஊராட்சியில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் 2019-20 இல் கொட்டரை கிராமத்தில் நான்கு பேர் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டியதாக போலி ஆவணம் தயார்செய்து 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அப்போதைய ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்பு காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இதன் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படும் என ஊழல் தடுப்பு காவல்துறையினர் கூறியுள்ளனர்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close