Published : 06,Jul 2021 07:27 AM
அமித் ஷா உடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்திப்பு

டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடந்த 3ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தனர். பின்னர் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்தித்தனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது.