[X] Close

தமிழகத்தில் ஒரேநாளில் 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Corona-affects-another-4013-people-in-Tamil-Nadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 43ஆவது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

image

தமிழகத்தில் 4,011 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேரும் என மொத்தம் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,194 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டநிலையில் ஒருநாள் பாதிப்பு 4,013 ஆக உள்ளது. சென்னையில் மேலும், 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.


Advertisement

image

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 115 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர். இணைநோய்கள் இல்லாத 17 பேர் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,933 ஆக உள்ளது. இன்றுவரை 35,881 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், 4,724 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close