Published : 29,Jun 2021 12:48 PM
வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்த சர்ச்சை: ரகசியம் காக்கப்படுவதாக புதிய தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த ரகசியம் காக்கப்பட்டு வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிம் ஜாங் உன்னின் உடல் மெலிந்த நிலையிலான புகைப்படம் வெளியானது. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் பரவின. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக அவர் உடல்ரீதியாக பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவை தொடர்பான ரகசியத்தை வெளியிடாமல் அந்நாட்டு அரசு பாதுகாத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.