[X] Close

”என்னுடைய பயோபிக்கில் என் ஃபேவரைட் சூர்யாதான் நடிக்கவேண்டும்”: சுரேஷ் ரெய்னா

சினிமா

If-my-biopic-is-made--someone-from-south-may-be-my-favorite--suresh-raina

தன்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால், அதில், எந்த ஹீரோ நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.


Advertisement

தோனி, மேரி கோம், சாய்னா நேவால் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு அவை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதால் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் தொகுப்பாளர் பாவனா சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக கலந்துரையாடல் செய்தார். அந்தக் கலந்துரையாடலில், ’உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் யார் நடிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள்?’ என்று சுரேஷ் ரெய்னாவிடம் பாவனா கேட்க உற்சாகமுடன் பதிலளித்துள்ள சுரேஷ் ரெய்னா “தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் என்னுடைய ஃபேவரைட் ஹீரோ சூர்யாதான் நடிக்கவேண்டும். அவரால்தான், என்னுடைய கதாபாத்திரத்தைச் செய்யமுடியும்” என்று பதிலளித்துள்ளார்.


Advertisement

அவரின், இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, சூர்யா கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் பயோபிக் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர், பேசிய வீடியோவை காண: https://twitter.com/Trendz_Suriya/status/1408085441660669958?s=20

ஏற்கனவே, கடந்த வருடம் சுரேஷ் ரெய்னாவிடம் ரசிகர் ஒருவர் ’உங்கள் பயோபிக்கில் யார் நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, துலகர் சல்மானையும் ஷாகித் கபூரையும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close