[X] Close

துளிர்க்கும் நம்பிக்கை: முதுகுதண்டுவடம் பாதித்தவருக்கு உதவிய திருப்பூர் அறக்கட்டளையினர்

துளிர்க்கும் நம்பிக்கை

Tirupur-based-Trust-doing-medical-help-via-Thulirkkum-Nambikkai-for-the-needy-one

புதியதலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கையில் முதுகு தண்டுவட பாதிப்பால் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல் வயதான தன் தயாருடன் வசித்து வரும் அழகு முத்து. ‘துளிர்க்கும் நம்பிக்கை’ குழுவிற்கு தொடர்புகொண்டு தனக்கு சிறுநீர் வெளியேற்ற பயன்படும் மருத்துவ உபகரணங்கள் தேவை என உதவி கோரியிருந்தார்.


Advertisement

image

அவ்வுதவியை வழங்கும் பொருட்டு திருப்பூரை சேர்ந்த இந்திரா சுந்தரம் அறக்கட்டளையின் இயக்குனர் இந்திராணி என்பவர், திருப்பூரில் இருந்து நேரடியாக சென்று அவரது வீட்டில் ஒரு வருடத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை அளித்து உதவினார்.


Advertisement

மேலும் புதியதலைமுறையில் துளிர்க்கும் நம்பிக்கையில் உதவி கோருபவர்களுக்கு நிச்சயம் உதவ தயாராக இருப்பதாக கூறி, மனம் நெகிழ தெரிவித்திருக்கிறார்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கையொன்றுக்கு செய்யப்பட்டிருக்கும் உதவி இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.


Advertisement

image

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'


Advertisement

Advertisement
[X] Close